Skip to main content

மனிதர்கள் மற்றும் கால்நடைகளை துரத்தி, துரத்தி கடித்த நரி!!!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

மனிதர்கள் மற்றும் கால்நடைகளை துரத்தி துரத்தி கடித்த நரியை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
 

திண்டிவனம் அடுத்த நோளம்பூர் கிராமத்தில் நேற்று திடீரென காப்புக்காடு பகுதியில் இருந்து நரி ஒன்று ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த நரி, ஆனந்த் என்பவரின் கோழி, தினேஷ் என்பவரின் மாடு, துலுக்காணம் என்பவரின் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை தொடச்சியாக கடித்தது. பின்னர் துலுக்காணம் என்பவரது மகள் காளியம்மாள் (24) என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் மீது பாய்ந்து கடிக்க தொடங்கியது.

இதுவரை கால்நடைகளை கடிக்கும்போதெல்லாம் நாய் கடித்ததாக நினைத்து பொதுமக்கள் விரட்டி விட்ட நிலையில், மனிதர்களை கடிக்கும் போதுதான் நரி என்று தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி நரியை விரட்டத் தொடங்கினர். அப்போது மிரண்டு போன நரி, முத்தரசன் என்பவரது வீட்டின் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த அவரது மகள் மது நிஷா (5) என்ற குழந்தையை காலில் கடித்து குதறியது. மிரண்டு போன குழந்தை பலத்த சத்தத்துடன் அழத்தொடங்கியது. பதறிப்போன பெற்றோர் வீட்டின் உள்ளே சென்று குழந்தையை வெளியே தூக்கி வந்தனர்.


மேலும் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த நரி பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்க ஆரம்பித்தது. அப்போது இளைஞர்கள் கையில் வைத்திருந்த தடியால் நரியை அடித்து கொன்றனர்.

நரி கடித்ததில் பலத்த காயமடைந்த 5 வயது குழந்தை மது நிஷா மற்றும் காளியம்மாள் ஆகிய இருவரையும் சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படாததால், ஒலக்கூர் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பின்பு ஒலக்கூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பட்டப்பகலில் நரி ஊருக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Boy incident by electrocution Chief Minister MK Stalin obituary

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேவேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் தேவேந்திரன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

மேலும் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் தேவேந்திரன் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.