Skip to main content

ஐபிஎல் டிக்கெட் விற்பனை

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

வரும் 7ஆம்  தேதி ஆரம்பமாகும் 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை 10 ஆம் தேதி சேப்பாக்கத்தில்  எதிர்கொள்ளவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக களத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த சென்னை அணி தற்போது மீண்டும் களமிறங்க இருப்பதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்திலுள்ளனர்.

 

ipl

 

மேலும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதனால் சேப்பாக்கம் டிக்கெட் விற்பனை நிலையத்தில் இன்று கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் அலைபாய்ந்தது. மொத்தம் 32 ஆயிரம் இருக்கைகளில் 6 ஆயிரம் இருக்கைகள் ரசிகர்களுக்கு ஒதுக்கபட்டுள்ளது.

 

ipl

 

1300 ரூபாய் விலையுள்ள அடிப்படை டிக்கெட் இன்று விற்கப்படுகிறது. டிக்கெட் வாங்கவந்த ரசிகர்கள் கூட்டம் வாலாஜா ரோடு வரை வரிசைகட்டி நிற்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடிதந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்குவாட் மற்றும் ரகானவும் களமிறங்க தொடக்கத்திலேயே 1 ரன் எடுத்து ரகானே ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிச்சல் 11 எண்களும் ஜடேஜா 17 எண்களும் எடுத்து ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவன் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுக்கு 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்திருந்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிக்காவுக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டிக்காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று நிதானமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றிப்பெற செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கிகொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தேற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.