Throwing shoes on minister's car... 7 BJP members arrested!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி மரியாதை நிகழ்வு நேற்று மதுரையில் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,''தியாகியை அடக்கம் செய்கின்ற நாள் இது. இன்றைக்கு அவர் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை செய்வோம். நாளைக்கு இதைப் பற்றி பேசுவோம். யார் பிணத்தை வைத்து அரசியல் செய்வது என்பது உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். அதற்கு மேல் பாக்கி நாளைக்கு பேசிக் கொள்வோம்'' என்றார்.

இந்நிலையில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியது தொடர்பாக பாஜக மதுரை மாவட்ட துணைத் தலைவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் 28ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது அவர்கள் 7 பேரும்மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கார் மீது காலணி வீசிய பாஜக பெண் நிர்வாகி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment