Skip to main content

பாம்பை கடித்து துப்பிய இளைஞர்கள் கைது!

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Three youths arrested for biting snake and spitting it out ranipet

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33) சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். அந்த பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்குவதை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்திலிருந்து வேலூர் வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

அது யார் என விசாரித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவண பாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
students and public are suffering due to impact of traffic due to weekly market

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தை மைதானத்தில் கடந்த ஓராண்டு காலமாக புணரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் சந்தையின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. நாள் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இந்தச் சாலையில் ஒவ்வொரு வாரமும் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு வாரமும் நெரிசல் இருந்தாலும் மக்கள் சகித்துக்கொண்டனர். இந்த வாரம் மக்களிடம் இது கோபத்தை உருவாக்கியுள்ளது. காரணம், இந்த வாரம் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டது. மாணவ - மாணவிகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் நேரத்தோடு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பால் மாணவ - மாணவிகள் அதில் சிக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் எனப் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக அவதி அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கட்டுமானம் முடியும் வரை காவல்துறை போக்குவரத்து பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

சாரை பாம்பைச் சமைத்துச் சாப்பிட்ட சம்பவம்; வைரல் வீடியோவால் வசமாக சிக்கிய இளைஞர்

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Youth arrested for eating snake juice

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன்  தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள்  இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருமாபட்டு கிராமத்திற்குச் சென்று ராஜ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கறியாக்கி சாப்பிட்டதை ஒப்புக்கொண்டார். எதற்காக இப்படி செய்தாய் எனக்கேட்ட அதிகாரிகளிடம், அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெருகும், ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க. அதான் பாம்பை தேடிப்பிடிச்சி அடிச்சி சாப்பிட்டேன் என்றதைக் கேட்டு  அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.