Published on 05/04/2023 | Edited on 05/04/2023

அரக்கோணம் அருகே பாம்பை கடித்து துன்புறுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (33), சூர்யா (21), சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேர் தண்ணீர் பாம்பை பிடித்து அதனை கடித்து துப்பி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டனர். இந்த காட்சி இணையத்தில் வைரலான நிலையில் மூன்று பேரையும் ஆற்காடு சரக வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏற்கனவே நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை துன்புறுத்தி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட நபர்கள் இதேபோல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
- தென் இந்திய சினிமாவின் சிறந்த பிரபலமாக சூர்யா தேர்வு
- தென் இந்திய சினிமாவின் சிறந்த பிரபலமாக சூர்யா தேர்வு
Follow us On


