திருச்சி மாவட்டம், மணப்பாறை அக்ரஹார பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர், மணப்பாறையில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் பிரபு(22) எனும் வாலிபர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடையின் உரிமையாளர் தனபாலுவுக்கும் பிரபுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் பிரபு 18 பேருக்கும் மேல் ஆட்களை அழைத்து வந்து கடந்து 31.03.22 ம் தேதி தனபாலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து தனபால் மணப்பாறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடந்த 04.04.22ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரப்பட்டது. மேலும், வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பிரபுவை மணப்பாறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.