Skip to main content

தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Those involved in serial robbery arrested ...


விழுப்புரம் கே.கே.நகர் அப்துல் கலாம் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ராம சேசு. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி, தங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு சொந்த வேலையாக, பெங்களூர் சென்றுள்ளனர்.  


ராம சேசுவின் நண்பர் ஜெயசீலனை, ராம சேசு வீட்டின் பாதுகாப்பு கருதி, அவரது வீட்டிற்கு அவ்வப்போது சென்று கண்காணித்து வருமாறு ராம சேசு கூறியுள்ளார். அதன்படி ஜெயசீலனும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், ஒரு நாள் இரவு ராம சேசுவின் வீட்டு முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 60 சவரன் நகை மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். 


இந்தத் தகவல், ஜெயசீலனுக்குத் தெரியவரவே, பெங்களூரில் இருந்த தனது நண்பர் ராம சேசுவுக்குத் தகவல் அனுப்பியுள்ளார். அவர் பெங்களூரிலிருந்து வந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் விநாயகம், வழக்குப் பதிவு செய்து, அவரது தலைமையிலான போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வந்தனர். 


காவல்துறையினர், இரவு ரோந்து சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததில், அந்த மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், அங்கு வைத்து விசாரணை நடத்தினர். 


அந்த விசாரணையில், அவர்கள் மூவரும் திருவாரூர் மாவட்டம் புட்டலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், பண்ருட்டி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்த பெருமாள், பண்ருட்டி அருகில் உள்ள பூங்குண்ணம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் ராம சேசுவின் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் 3 பேரும் நீண்ட நாட்களாகப் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, ஆட்கள் இல்லாத இரவு நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் தொழிலை செய்துவந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

cnc


இவர்கள், ராம சேசுவின் வீட்டில், 60 பவுன் நகை மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடலூரில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்திருந்த, 350 கிராம் நகை சீட்டு உள்பட பல ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தக் கொள்ளையில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.