தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவகத்தில் அனுசரிக்கப்பட்டது.

Advertisment

 Thoothukudi shooting incident :naam tamilar salute

கடந்த மே 22-ல்தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், நூறு நாட்களுக்கும் மேலாக போராடிய அப்பாவி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதில்13 பேர் இறந்தனர்.இந்த சம்பவத்தில்துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலர் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

 Thoothukudi shooting incident :naam tamilar salute

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவகத்தில் சுடர் தமிழர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.