Skip to main content

சென்னையில் கடத்தப்பட்ட இளம்பெண் புதுவையில் மீட்பு; அதிமுக நிர்வாகி கைது

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

thiruvottiyur young women incident police action taken by admk executive

 

இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 28). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதுடன்  திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக மாணவரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் இளம்பெண் ஒருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோகுலகிருஷ்ணனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.

 

இதனால் கோபமுற்ற கோகுலகிருஷ்ணன் தனது நண்பர்கள் 4 பேர் உதவியுடன் இளம் பெண்ணை திருமணம் செய்யும் நோக்கில் கடந்த 21 ஆம் தேதி காலை வீட்டில் இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட இளம்பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடி வந்தனர். கோகுலகிருஷ்ணன், கடத்தப்பட்ட இளம்பெண் ஆகிய இருவரும் புதுச்சேரியில் உள்ள கோட்டைகுப்பம் என்ற பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி விரைந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டதுடன் கோகுல கிருஷ்ணனையும் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்வராயன் மலையில் ட்ரோன் விட்டு சோதனை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024

 

  kallakurichi incident; Drone test on kalvarayan Hill

அண்மையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரமருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் திடீர்  ஆய்வு நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தார்கள் குறிப்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் இங்கு நியமிக்கப்பட்டிருந்தார். சட்ட ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளை முடுக்கிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேரில் சென்று கல்வராயன் மலைப் பகுதிக்கு சென்றுள்ள ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கல்வராயன் மலை, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்திய நிலையில் சேராப்பட்டு பகுதியில் டிரோன்களை பார்க்க விட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இனி கல்வராயன் மலைப்பகுதியில் இது போன்ற கள்ளச்சாராயம் காய்ச்சும் நடவடிக்கைகளோ அல்லது வேறு தவறான நடவடிக்கைகளோ நிகழாத வண்ணம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

கடல் அலையில் சிக்கி ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
2 Chennai IT employees lose their live in Parangipet sea wave


சிதம்பரம், பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஜோ.கோ கார்ப்பரேசன் ஐடி கம்பெனியில் பணிபுரியும் கணினி பொறியாளர்கள் ஷாம் சுந்தர் (26) கோகுல் பிரசாத் (26) பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர்கள் கூடுவாஞ்சேரியில் தங்கி பணி செய்து வருகிறார்கள்.  

இவர்களுடன் 2 ஆண் மற்றும் 2  பெண் நண்பர்கள் என மொத்தம் 6 பேர் பாண்டிச்சேரியில் இருந்து கார் மூலம் பிச்சாவரம் சுற்றுலா தளத்திற்கு சென்று படகு சவாரி செய்துவிட்டு பின்னர் சாமியார் பேட்டை கடற்கரைக்கு குளிக்க வந்துள்ளனர்.அப்போது ஷாம் சுந்தர் மற்றும் கோகுல பிரசாத் ஆகியோர் கடல் அலையில் சிக்கி அடித்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்தவர்கள் அவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.