Skip to main content

அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தாயும், மகளும் பலி!

Published on 21/07/2019 | Edited on 21/07/2019

திருவாரூரில் தாயும் மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருவாரூர் நகரப்பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (45), இவருக்கு கோமதி என்ற மனைவி (37)  நாகஸ்ரீ (5 ) நவஸ்ரீ (3)என்ற இரு மகள்கள் உள்ளனர். செல்வம் கோயம்பத்தூர் பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார். கோமதி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

 

THIRUVARUR RAIL SUICIDE IN ONE FAMILY DEATH TWO PERSON

 

 

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி செல்லும் விரைவு ரயிலில் கோமதி மற்றும் நவஸ்ரீ இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த ரயில்வே ஓட்டுநர், ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து  ரயில்வே போலீசாரும், திருவாரூர் நகர காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உடல் சிதறி இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குடும்பத்தகராறு காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Farmers rails struggle to condemn the central government

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று முன்தினம் (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் டெல்லி - பஞ்சாப் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு டிரோன்களை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து பஞ்சாப்பில் விவசாயிகள் இன்று (15.02.2024) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளதாக ஏற்கனவே இருந்தனர். அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா, ராஜ்புரா ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏராளமான விவசாயிகள் ராஜ்புரா ரயில் நிலையத்திற்கு வந்து ரயில்களை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நேற்று (14.02.2024) இரவு 7 மணிக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது. இருப்பினும் நேற்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.