Skip to main content

திருவாரூரில் நகைக் கொள்ளையன் முருகன் இறுதிச் சடங்கு???

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

Jewellery robber murugan

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையியின் பின்புறம் குடைந்து, 13 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொள்ளையடிக்கப்பட்டன. 

 

இந்தக் கொள்ளை சம்பவத்தால் நாடே அதிர்ந்தது. குற்றவாளியைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் போடப்பட்டும் பிடிக்க முடியவில்லை.

 

பின்னர் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி மணிகண்டன் என்பவனை பிடித்தனர். அவனிடம் இருந்த 4 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பெயரில் முருகன் என்பவனைத் தேடினர். 

 

போலிசார் தேடுவதை அறிந்த முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகினான். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டான். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொள்ளை வழக்கில், முருகன் தான் மூளையாகச் செயல்பட்டான் என்பதை போலிசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், முருகன் கொடுத்த தகவலின்படி, திருச்சி காவிரிப் படுகையில் 4 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்டெடுக்கப்பட்டன.


இந்தக் கொள்ளை மட்டுமல்லாது சென்னையில் 12 மற்றும் கர்நாடகாவில் 46 வழக்குகளில் சிக்கிய பிரபல கொள்ளையன்தான் இந்த முருகன். உடல்நலக் குறைவுடன் இருந்த முருகனுக்கு கடந்த மே மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் அவன் மீதான பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவனால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.

 

cnc

 

இதனிடையே, அவனது உடல்நிலை மோசமாகவே அவன் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். 6 மாதமாக சிகிச்சை பெற்று வந்த முருகன், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான். இறுதிச் சடங்கு திருவாரூரில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை; சென்னையில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
avadi Jewelry incident Sensation in Chennai

துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு 4 மர்ம நபர்கள் காரில் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.