Skip to main content

“ஆணவக் கொலை ஒரு தேசிய அவமானம்” -நாடாளுமன்றத்தில் திருமாவளவன் உரை

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன்  இன்று நாடாளுமன்றத்தில் ஆணவக் கொலைகளை எதிர்த்து உரையாற்றினார். 

 

tt

 

அப்போது தொல்.திருமாவளவன்,   “மிக முக்கியமான ஒரு பிரச்சனையை நான் இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இது ஒரு தேசிய அவமானம். Honour killing என்கிற ஆணவக் கொலை நாடு முழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் வேதனைப்பட கூடிய வெட்கப்பட வேண்டிய ஒரு குற்றச்செயல் ஆணவக் கொலை என்பதாகும். அண்மையில் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வர்சினி பிரியா என்கிற இளம்பெண்ணையும் அவள் திருமணம் செய்துகொண்ட கனகராஜ் என்கிற இளைஞனையும் கொடூரமாக அவனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறார்கள்.  சாதிகவுரவம் என்கிற வறட்டுக்கவுரவத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கிறது. 

 

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்ட உசுருபேண்டா என்னுமிடத்தில் பலமநேறி என்கிற நகரத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் கேசவ் மற்றும் ஹேமாவதி என்கிற இரண்டு பேர் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் இரண்டாண்டுகளுக்கு பிறகு அந்த பெண் பிறந்து 10 நாளான குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிய நேரத்தில் அந்த பெண்ணை கடத்திச் சென்று அவருடைய பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள். இது நாள்தோறும் நாடு முழுவதும் நடந்து வருகிற ஒரு கொடூரமான குற்றச் செயலாகும். 

 

இதைப்பற்றி ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதை மட்டும் நான் படித்துவிட்டு என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன் “In 2018 supreme court in a historical verdict on  honour killings said; “it can be stated without any fear of contradiction that any kind of torture or torment or ill-treatment in the name of honour that tatamount to atrophy of choice of an individual relating to love and marriage by any assembly, whatsoever nomenculture it assumes, is illegal and cannot be allowed a moment of existence.” It has issued some guidelines to both centre and states. On the direction of supreme court The Law Commission of India already submitted a bill named  ‘Prohibition of Interference with Matrimonial Alliances In The Name of Honour and Tradition Bill’.  It is still pending with the Central Government.

I request the government to take immediate steps to pass the Bill on Honour Killings submitted by The Law Commission of India. Thank You sir” எனக் குறிப்பிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.