Skip to main content

"இது மிகுந்த கவலையைத் தருகிறது" - திருமாவளவன் வேதனை!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

Thirumavalavan Comment About White Paper report on Finance

 

கடந்த 10 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, "இந்த நிதிநிலை அறிக்கை என் பெயரில் வெளியிடப்பட்டாலும், இதில் பலரது உழைப்பு இருக்கிறது. முதல்வர் காட்டிய வழியில் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொதுசந்தா கடன் 2.63 லட்சமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறையில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது இல்லை. கரோனா வருவதற்கு முந்தியே இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்றார்.

 

Thirumavalavan Comment About White Paper report on Finance

 

இந்நிலையில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது கவலையைத் தருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ''கடந்த அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாகக் கையாளப்படவில்லை. ஊழல் மிகுந்த ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் வாயிலாகக் கடன் சுமை அதிகரித்தது தெரியவந்தது கவலையைத் தருகிறது. தேர்தல் காலத்தில் தந்த அறிவிப்புகளை திமுக அரசு தள்ளிப்போடக்கூடாது ''எனக் கூறியுள்ளார்.

 

Thirumavalavan Comment About White Paper report on Finance

 

இதேபோல் வெள்ளை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''வெளியான வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் வரலாறு காணாத கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியின் செயல்பாடுகள் மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு'' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

'எரியுதுடி மாலா ஃபேன போடு என கதறுகிறது பாஜக'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு  

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
BJP shouts 'Eriyuthudi malaa fana potu' - Chief Minister M.K.Stal's speech

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மேடையில் பேசிய அவர், 'திருமாவளவனை வெற்றி பெறவைக்க வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், அரியலூர் அரிமா எஸ்.எஸ்.சிவசங்கரையும் இறக்கி விட்டிருக்கிறேன். ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்கள் களத்தில் இருக்கின்றன. அதேபோல் மயிலாடுதுறையின் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா வெற்றி பெற கை சின்னத்தில் வாக்குகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயாராகி விட்டீர்களா? இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? இந்த மு.க.ஸ்டாலின் தூதுவர்களாக உங்கள் பகுதியில் உள்ள மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை திரட்ட வேண்டும். தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் பிரதமராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். சமூகநீதியை காண்கின்ற ஒரு பிரதமர் டெல்லியில் அமர வாக்களிக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள்வதற்கு வாக்களிக்க வேண்டும்.

இப்பொழுது இருக்கிற பிரதமர் மோடிக்கு சமூகநீதி மேல் அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை  மருந்துக்கு கூட நினைப்பதில்லை. சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவை அவருக்கு பிடிக்கவில்லை. மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்கு தேவையில்லை.

இந்த தேர்தல் மூலமாக இரண்டாம் விடுதலை போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சமூகநீதி இந்தியா முழுக்க பரவ கிடைத்த வாய்ப்பு தான் இந்தியா கூட்டணி. சமூக நீதி நமக்கு சும்மா கிடைத்ததில்லை. தியாகத்தால் விளைந்தது தான் சமூக நீதி. சமூக நீதிதான் ஒன்றும் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. நாட்டுக்கே வழிகாட்டக் கூடிய வகையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கமும் நம்முடைய கலைஞரும்தான். இரண்டு மூன்று தலைமுறையாகதான் நம்ம வீட்டில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வாரார்கள். முன்பு அத்திப்பூத்த மாதிரி சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வர முடிந்தது. ஆனால் இப்பொழுது அதிகம் வர முடிகிறது. இதெல்லாம் பாஜகவினுடைய கண்ணை உறுத்துகிறது. இந்த வேலைக்கு இவர்களெல்லாம் இட ஒதுக்கீடால் வந்து விடுகிறார்களே என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா ஃபேன போடு' என்று கதறுவார்கள். இட ஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து நம்ம குழந்தைகள் படித்து வேலைக்கு போவதை எடுக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன் தான் பாமக கூட்டணி பேசியிருக்கிறது'' என்றார்.