மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முனைவர் பட்டம் (Doctorate – Phd) பெற்றார். இன்று பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முனைவர் பட்டத்தை திருமாவளவன் வழங்கினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., குற்றவியல், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலில் குற்றவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை திருமாவளவன் மேற்கொண்டார்.
முனைவர் பட்டம் ஆய்வு (Phd) மேற்கொண்டார் தொல்.திருமாவளவன். தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு பல்கலைகழகத்தில் சமர்ப்பித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
பின்னர் 2018ல் பல்கலைகழகத்தில் நடைபெற்ற வாய்மொழி தேர்வில் பேராசிரியர் சொக்கலிங்கமும், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் பாஜ்பாயும் புறத்தேர்வராக பங்கேற்றனர். வாய்மொழித் தேர்விலும் தேர்ச்சி பெற்றார் திருமாவளவன். அப்போது அவருக்கு தற்காலிக சான்றிதழை (Provisional Certificate) வழங்கியது பல்கலைகழகம்.
இன்று நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் முனைவர் பட்டத்தை திருமாவளவனுக்கு வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்றார்.