Skip to main content

இஸ்லாமியர்களை புறக்கணிப்பது வெளிப்படையான வெறுப்பு அரசியல்-திருமாவளவன்  

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். 

சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். 

 

thirumavalan interview

 

இந்நிலையில் இந்த மசோதா குறித்து சிதம்பரம் எம்பி திருமாவளவன் கூறியுள்ளதாவது, குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடைப்படியிலான மிக மோசமான பாகுபாடு. முஸ்லீம்களை புறக்கணிப்பது வெளிப்படையான வெறுப்பு அரசியல், மனிதநேயமற்ற ஒடுக்குமுறை. இது பாசிசத்தின் உச்சம். அரசியமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்