Skip to main content

பேரிகார்டு சத்தத்தால் எரிச்சலடைந்த கோவில் யானை; சமாளித்து அழைத்துச் சென்ற பாகன்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

 The temple elephant was irritated by the pericardial noise; Bagan managed to take it

 

திருச்செந்தூரில் பேரிகார்டு இழுக்கும் சத்தம் கேட்டு கோவில் யானை மிரண்ட சம்பவம் கோவில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதன் காரணமாக வழக்கம்போல் 6 கிலோ பச்சரிசி, 2 கிலோ விபூதி இரண்டையும் கலந்து பூசப்பட்டு கோயில் யானை வெள்ளை நிறமாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பூஜைகளும் முடிந்த நிலையில் கோயிலை விட்டு யானை வெளியேறியது. அந்த நேரத்தில் கோவிலில் பணியிலிருந்த பாதுகாவலர் ஒருவர் இரும்பு தடுப்பை ( பேரிகார்டு)  இழுத்தார். இதனால் 'கீர்....' என சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு எரிச்சலடைந்த யானை திடீரென பக்தர்கள் கூட்டத்தில் சடாரென திரும்பியது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் யானைப்பாகன் யானையை சமாளித்து அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் பாண்டி கொலை வழக்கு; ஐந்து பேர் சரண்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Ram Pandi  case; Five people are Saran

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ரவுடி ராமர் பாண்டி என்பவர் கரூரில் தலை சிதைந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய கொலைக்குப் பழிக்குப் பழியாக ராமர் பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தி முடித்துவிட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் வீசிய சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் உயிரிழந்தனர். அதில் ரவுடி ராமர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்காக சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராமர் பாண்டி மீது மர்ம நபர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி தலையைச் சிதைத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் தற்போது சரணடைந்துள்ளனர்.

மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், பூவந்தி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், மேலூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, தனுஷ் மற்றும் தர்மா ஆகிய ஐந்து நபர்கள் கொலை வழக்கு சம்பந்தமாக சரணடைந்துள்ளனர்.

Next Story

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு - செல்போனில் புகைப்படத்தைப் பார்த்து மகன் கதறல்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Mysterious old lady rescued as a corpse- Son screams after seeing the photo on his cell phone

ஈரோடு மாவட்டம் திண்டல் அடுத்த காரப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (74). இவரது மகன் மணியுடன் வசித்து வருகிறார். சகுந்தலா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று பின்னர் மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி மாலை திண்டல் சென்று வருவதாகக் கூறி விட்டுச் சென்ற சகுந்தலா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சகுந்தலா மகன் மணி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்து மாயமான தனது தாயை மீட்டுத் தர வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார்.அதன் பேரில் போலீசார் சகுந்தலாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சகுந்தலாவின் மகன் மணி செல்போனில் ஒரு புகைப்படத்துடன் தகவல் வந்தது. அதில் இந்த மூதாட்டி நசியனூர் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் இவரது உடல் தற்போது பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் வந்திருந்தது. செல்போனில் வந்திருந்த புகைப்படம் தனது தாயின் படம் என்பதை அறிந்து மணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தாயின் உடலைக் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.