Skip to main content

பக்தர்களின்றி நடந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!

Published on 21/11/2020 | Edited on 22/11/2020

 

Thiruchendur 'soora samharam' without devotees!

 

கரோனாத் தொற்று காரணமாக இந்த வருடம், தென் மாவட்ட அறுபடைவீடுகளில், 2 -ஆம் படை வீடான, திருச்செந்தூர் செந்திலாண்டவனின் திருக்கோவிலில், சூரசம்ஹார விழா முதன்முறையாக பக்தர்களின்றி நடந்தேறியது.

முருகப்பெருமான், அசுரனான சூரபத்மனை வதம் செய்து, தேவர்களைக் காத்த பூமி திருச்செந்தூர். அரிதிலும் அரிதாக செந்திலாண்டவனின் சூரசம்ஹார வதம் நடந்த பகுதி என்ற வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட அருட்பூமி திருச்செந்தூர். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவர். கடந்த தீபாவளிக்கு மறுநாள் தொடங்கிய சுப்பிரமணிய சுவாமியின் திருவிழாவின் ஏழாவது நாளான, நவ.20 அன்று, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நாள் தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சூரசம்ஹார நிகழ்வு அன்று அதிகாலை ஒரு மணிக்கு, நடை திறக்கப்பட்டு, தீபாராதனை உதய மார்த்தாண்ட பூஜைகள் தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம், மூலவருக்குப் பூஜைகள் நடந்தேறின.

இந்த வைபவங்களில் கரோனாத் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மதியம் ஜெயந்திநாதர் அம்பாளுடன் திருவாடுவடுதுறை சஷ்டி மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு நடந்த மகா தீபாராதனைக்குப் பின்னர், மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது. வழக்கம் போல, திருக்கோவிலின் முன்புள்ள கடற்கரையில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், படை பரிவாரங்களுடன் வந்த சூரபத்மனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்.
 

cnc

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், ஆலய பட்டர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், பாதுகாப்பு போலீசார் மட்டுமே கலந்து கொண்டனர். கரோனாத் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளியூர் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நிகழ்ச்சி நடந்த கடற்கரையை ஒட்டி தகர ஷீட்டுகளைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தென்மண்டல ஐ.ஜி.யான முருகன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.