Skip to main content

வழிப்பறித் திருடன் திரைப்படக் கதாநாயகனா..?

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

Is the thief a movie hero?

 

நடைப்பயிற்சியின்போது, தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட சங்கிலியை மீட்டுத் தருமாறு காவல்துறையிடம் பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிய வேளையில், காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளார் திரைப்பட கதாநாயகனான அந்த வழிப்பறித் திருடன்.

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட செஞ்சை நாச்சுழியேந்தலைச் சேர்ந்தவர் நாகராசன். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இவரும், இவருடைய மனைவியான குழந்தையம்மாளும் இணைந்து அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். சம்பவத்தன்று கணவருடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொண்ட குழந்தையம்மாள், தனக்கு சோர்வாக இருப்பதாகக் கூறி வீடு திரும்ப எத்தனித்து, கணவரிடம் கூறிவிட்டுத் தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இவ்வேளையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர், குழந்தையம்மாள் முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’யை தெளித்து, அவரை மிரட்டி, கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியைக் கேட்டுள்ளனர். செய்வதறியாத அவர், தனது நகையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். மனுவைப் பெற்ற துணைச்சரக காவல்துறை டிஎஸ்பி அருண் உத்தரவின் பேரில், தெற்கு காவல்நிலைய எஸ்.ஐ.,க்கள் தவமுனி, பார்த்திபன் தலைமையில் சுரேஷ், பார்த்திபன், தட்சிணாமூர்த்தி மற்றும் முருகன் ஆகிய காவலர்கள் அடங்கிய தனிப்படையினர், குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இது தொடர்பாக நகரிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சங்கிலி பறிப்பு குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

இது தொடர்பாக பேசிய காரைக்குடி துணைச்சரக காவல்துறையினரோ, "சம்பவத்தன்று அந்தம்மாவோட செயினைப் பறித்தவர்கள் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அங்கிருந்து அரியக்குடி, ஆறாவயல், கண்டனூர் ரோடு வழியாக காரைக்குடியில் நுழைந்தது எங்களுக்குத் தெரிய வந்தது. வண்டி எண், அடையாளம் போன்றவற்றைக் கொண்டு தீவிரமாக விசாரணை செய்தோம். அதில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் பத்தாவது வீதியில், அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருந்தவர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

 

தொடர்ந்து விசாரிக்கையில் அப்பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டது நான்தான் என்று அந்த அபார்ட்மெண்டில் இருந்தவர் தானே ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் அவர் தேவகோட்டை கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சீனு என்கின்ற சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர், ‘குப்பைக்காரன்’, ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘தேவக்கோட்டை காதல்’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தற்போது அடுத்தப் படத் தயாரிப்பிற்கான கதை டிஸ்கஷனுக்காகவும், லொகேஷன் பார்ப்பதற்காகவும் காரைக்குடியில் தங்கியிருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக நடித்துக்கொண்டே சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டது இங்கு மட்டும்தானா, இல்லை பல்வேறு இடங்களிலா இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றோம்” என்றனர். மேலும், இவர் கைக்காட்டியதின் பேரில், இவருடன் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியைத் தொண்டிப் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படம்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதவ திறங்க..... வீட்டிற்குல் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டித் தள்ளிய கும்பல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
bagwari gang style Robbery in Sivaganga

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது கல்லுவழி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. 40 வயதான பாரி கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அரசி, இவருக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு ஜெர்லின் என்ற 14 வயது மகளும், ஜோபின் என்ற 10 வயது மகனும் உள்ளனர். வெளி நாட்டு வேலையில் பிசியாக இருந்து வரும் ஜேக்கப் பாரி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் வெளி நாட்டுக்கு சென்று விடுவார். இவரின் தந்தை சின்னப்பன். இவருக்கு 67 வயதாகிறது. இவரின் மனைவி உபகாரமேரி இவருக்கு 65 வயது ஆகிறது. 

இந்நிலையில், ஜேக்கப் பாரியின் குடும்பத்தில் உள்ள 5 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல தங்களது வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென அதிகாலை 3 மணியளவில் யாரோ வீட்டை தட்டியதாக சொல்லப்படுகிறது. அதிகாலை நேர்த்தில் யாராக இருக்குமென நினைத்த ஜேக்கப்பின் தந்தை, எழுந்து சென்று கதவை திற்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் கண் மூடித்தனமாக முதியவரை வெட்டியுள்ளது. உடனே முதியவர் சின்னப்பன் கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு அவரின் மனைவி மற்றும் மருமகள் பேரன் பேத்தி என அனைவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது, அடுத்தடுத்து ஓடி வந்த அனைவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேரும் வீட்டுக்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

பின்னர், சிறிது நேரம் கழித்து காலையில் சிறுவன் ஜோபின் கண் விழித்துள்ளான். அப்போது, தனது அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா என அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனே, சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்த அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி சென்று நின்றுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் உள்ள யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தக் கொடூர தாக்குதலால் கோபமடைந்த பொதுமக்கள், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுவழி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொள்ளை கும்பல்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர், மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 5 பேரை சரமாரியாக வெட்டி விட்டு, கொள்ளயடித்த சம்பவம் காளையார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

இரவு நேரத்தில் செயின் பறிப்பு; சாலையில் அலறித்துடித்த பெண்; வைரலாகும் சிசிடிவி காட்சி

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

Chain flush at night; Screaming woman on the road; CCTV footage goes viral

 

திருப்பூரில் இரவில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

திருப்பூர் மாவட்டம் மடத்துபாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது மனைவி யுவராணி மற்றும் மகன் கனிஷ்க் உடன் உறவினர்கள் வீட்டுக்கு திருமண விழாவிற்கு சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்பொழுது திருப்பூர்-அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் வந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், யுவராணி கழுத்தில் இருந்த பத்தரை சவரன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த யுவராணி மற்றும் அவரது மகன்  ஆகியோர் சாலையில் உதவி கேட்டு  அலறும் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.