Skip to main content

“மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட்டை  மூடினர்” - மீண்டும் ஆளுநர் சர்ச்சை

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

 'They instigated the people and closed down the Sterlite plant'-again the governor's controversy

 

குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கலந்துரையாடினார். ஏற்கனவே திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதனம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அவர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் பேசியுள்ளதாவது, ''நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதம் நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்.  கூடங்குளம் அணு உலை, விளிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களைத் தூண்ட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எஃப்சிஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது'' எனப் பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘உடனடியாக வெளியேறுங்கள்’; போலீசாருக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு?

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
West Bengal Governor's order to police?

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸுக்கும் இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இப்படிபட்ட பரபரப்பான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நேற்று (16-06-24) ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸை சந்திக்க வந்துள்ளனர். அவர்கள் ஆளுநரை சந்திக்க முறையான அனுமதி இருந்தும் அவர்களை ஆளுநர் மாளிகைக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஆளுநர், ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

ஜன்னல் திருடர்கள் நடமாட்டம்; அச்சத்தில் கோவில்பட்டி

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Movement of window thieves; Temple bar in fear

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வீட்டின் ஜன்னல்களை குறிவைத்து அதன் வழியே திருட்டுக்களை அரங்கேற்றும் ஜன்னல் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் நிறுவனர் ஒருவரின் வீட்டில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்து பத்து சவரன் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். கிருஷ்ணா நகரில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் ஜன்னலை குறிவைத்து திருட்டை அரங்கேற்றும் இந்த கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அக்கம் பக்கத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே பகுதியில் மூன்று வீடுகளின் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்துள்ளது. முகத்தை முழுமையாக துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, அரைக்கால் சட்டை அணிந்தபடி நடமாடும் அந்த நபர் வீட்டில் திறந்து இருக்கும் ஜன்னல்களைக் குறிவைத்து திருட்டை அரங்கேற்ற திட்டமிடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.