Skip to main content

"உயிரை பணயம் வச்சு படம் எடுத்துருக்கோம்" - மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

Published on 08/07/2022 | Edited on 09/07/2022

 

ps

 

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

 

ps

 

இந்நிலையில்  'பொன்னியின் செல்வன்' பாகம் ஒன்றின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் மணிரத்னம் ''என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு. நான் காலேஜ் ஆரம்பிச்சபோது அந்த புத்தகத்தை படித்தேன். அப்போது முதல்  மனசை விட்டு அது வெளியே போகவே இல்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இது மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்க வேண்டிய படம். நாடோடி மன்னனுக்கு பிறகு இந்த படம்தான் எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போய்விட்டது. ஆனால் இன்றைக்குதான் எனக்கு புரிந்தது. எதனால் அந்த படம் நின்றது என்று. எங்களுக்காக விட்டு வைத்துவிட்டு போய்விட்டார்.

 

இதனை பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். நானே மூன்றுமுறை முயற்சி செய்தேன்.1980 மற்றும் 2000 அடுத்து 2010 ஆகிய வருடங்களில் படத்தை எடுக்க ட்ரை பண்ணினேன். எனவே இந்த படம் எவ்வளவு பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி என்று எனக்கு தெரியும். இதில் நடித்திருக்கக் கூடிய கலைஞர்கள், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், ஏ.ஆர்.ரஹ்மான், தோட்டா தரணி என எல்லாருடைய பங்களிப்புடன் சேர்ந்துதான் இது நிகழ்ந்துள்ளது. இல்லையென்றால் இதை என்னால் செய்திருக்க முடியாது. கரோனா காலத்தில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதையும் தாண்டி என்னுடன் பயணித்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி'' என்றார்.

 

ps

 

அப்பொழுது ஏ.ஆர்.ரஹ்மான் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ''நார்மல் ஆட்களிடமிருந்து டேலண்ட்களை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணிரத்னத்திடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். என்னிடம் வரும் பாடகர்கள் சொல்வார்கள் எப்படி நன்றாக பாட வைத்தீர்கள் என்று கேட்டால், இவரைத்தான் சொல்வேன். இந்த படம் பற்றி சொல்லவே தேவையில்லை இது நம்ம படம். இந்தியாவுடைய படம். எனக்கு என்னவென்றால் இவ்வளவு பெரிய படத்தை இவர் ஆரம்பிச்ச உடன் எவ்வளவோ வழிகளில் இசையமைக்க வேண்டும் என்று யோசித்தோம்.ரிசர்ச்சுக்கு பாலி போனோம் . அங்கே ஒரு வாரம், இரண்டு வாரம் தங்கி அங்கு இருக்க கூடிய இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், கோவில்களை ரிசர்ச் செய்துவிட்டு திரும்பி வந்தோம். அதுக்குள்ள கரோனா லாக்டவுன். இவ்வளவு பெரிய, பிரமாதமான படத்தை உயிரை பணயமாக வைத்து எடுத்த எல்லோருக்கும் சல்யூட். உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள். நமக்கெல்லாம் தெரியும் நிறைய பேரை கரோனாவால் இழந்திருக்கிறோம். எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். எல்லா புகழும் இறைவனுக்கே. என்னுடைய இசை பிடிக்கும் என்று நினைக்கிறேன்'' என்றார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச திரைப்படத்திற்கு இசையமைக்கும் கதீஜா ரஹ்மான்

 

Khatija Rahman Makes International Composing Debut with ‘Lioness'

 

பிரபல இசையமைப்பாளரின் ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார். இதையடுத்து ஹலிதா ஷமீம் இயக்கி வரும் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கடந்த மாதம் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. 

 

ad

 

இந்த நிலையில் பிரிட்டன் - இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஆகியோர் இதில் நடிக்கவுள்ளார்கள். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இயக்கவுள்ள இப்படத்தை இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர் . 

 

இந்த படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோபியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர். இவரது வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு பற்றிய கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் தற்போது கோவாவில் நடந்து வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான்.

 

 

 


 

Next Story

சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் பாடல்

 

ar rahman pippa movie song issue

 

ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் இஷான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தி படம் ‘பிப்பா’. இந்தப் படம் 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரில் கேப்டன் பல்ராம் சிங் மேத்தாவின் செயல்களை விவரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், ‘கரார் ஓய் லூஹோ கோபட்’ என்ற பாடல் சர்ச்சையாகியுள்ளது. 

 

இந்தப் பாடல் வங்காளக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் என்பவரால் 1922 ஆம் ஆண்டு எழுதி இசையமைக்கப்பட்ட நிலையில், இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தியிருந்தார் ரஹ்மான். ஆனால் காசி நஸ்ருல் குடும்பத்தினர், இந்தப் பாடலைப் பயன்படுத்தத்தான் அனுமதி அளித்தோம், மற்றபடி டியூனை அல்லது ரிதம் உள்ளிட்டவற்றை மாற்றுவதற்காக அல்ல எனத் தெரிவித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

இதையடுத்து பிப்பா படத் தயாரிப்பு நிறுவனம், இந்த சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “மறைந்த  கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் மீது எங்களுக்கு பெரிய மரியாதை உள்ளது. பாடல் வரிகளைப் பயன்படுத்த கவிஞரின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி வாங்கியுள்ளோம். பாடலின் கலாச்சார முக்கியத்துவத்திற்கு மரியாதை செலுத்துவதே எங்கள் நோக்கம். ஆனால் அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களின் விளக்கம் அவர்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.