Skip to main content

தங்க கட்டி இருக்கு! வந்தா எடுத்துக்கலாம்; கொள்ளைக் கும்பலை பிடித்த போலீஸ் 

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

There is a gold nugget! Come and take; The police caught the robbery gang

 

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜியாவுதீன். இவரது நண்பர் ஜெகதீஷ். ஜியாவுதீனுக்கு ஜெகதீஷ் மூலம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அன்வர் பாஷா, தன்னிடம் வெளிநாட்டு தங்க கட்டிகள் உள்ளதாகவும், ரூ. 15 லட்சம் கொடுத்தால், அந்தத் தங்கக் கட்டிகளைக் கொடுப்பதாகவும் ஜியாவுதீனிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற ஜியாவுதீன், தனது மற்றொரு நண்பரான கார்த்தி என்பவருடன்  ரூ.14,50,000 எடுத்துக்கொண்டு, கடந்த 18 ம் தேதி மாலை அன்வர் பாஷாவை துவரங்குறிச்சி, மோர்னிமலை முருகன் கோவில் பின்புறம் சந்திக்க சென்றுள்ளார். 

 

இவர்கள் இருவரும், அங்கிருந்து அன்வர் பாஷாவிற்கு போன் செய்து தாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு மற்றொரு காரில் அன்வர் பாஷா மற்றும் 7 நபர்கள் வந்துள்ளனர். பிறகு அந்த காரில் இருந்து, ஒரு நபரை அனுப்பி ஜியாவுதினிடம் பணம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். பிறகு உடனடியாக, காரில் காக்கி சீருடை அணிந்த ஒருவருடன் மற்ற 7 நபர்களும் சேர்ந்து வந்து, ஜியாவுதீன் மற்றும் அவரது நண்பர் இருந்த காரின் பின்புறம் ஏறி, கார்த்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.14,50,000 பறித்துச் சென்றுள்ளனர். 

 

இது சம்பந்தமாக துவரங்குறிச்சி போலீஸில் ஜியாவுதீன் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை பெற்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோன்று கடந்த 28.01.2023-ம் தேதி திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி சந்தானமாதா கோவில் அருகில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி, ரூ.10,50,000 ஏமாற்றியதாக மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

There is a gold nugget! Come and take; The police caught the robbery gang

 

இதில், தொடர்புடையவர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று (21.09.2023) மதியம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொருவாய் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரின் அருகில் சென்ற போது, காரில் இருந்த 4 நபர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்தனர். 

 

பிடிப்பட்ட அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதில், மஞ்சம்பட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.10,50,000 ஏமாற்றி பணத்தை எடுத்து சென்றதாக ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் பிடிபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த ஒரு தங்ககட்டி (100 கிராம்), 10-போலி தங்கக்கட்டிகள், ரூ.2,70,000 பணம், 21 செல்போன்கள், போலி பத்திரங்கள், காசோலை புத்தகங்கள், 12-சிம் கார்டுகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜியாவுதீன் வழக்கு தொடர்பாக அந்தக் கும்பலிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளியை பிடித்த தனிப்படையினரின் சிறப்பான செயலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஐ.பி.எஸ். பாராட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முதல்வர் விசாரிக்க வேண்டும்' - பெண் தற்கொலையில் சிக்கிய பரபரப்பு கடிதம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
'chiefminister should investigate'-a letter from a woman involved  incident

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய கடிதம் போலீசார் வசம் சிக்கியுள்ளது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெங்களூரிலிருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார்  குஜராத் விரைந்தனர்.

குஜராத் காந்திநகர் பகுதியில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சூர்யா தற்கொலை குறித்து எழுதி வைத்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், 'பள்ளி மாணவன் கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் தன் மீது மைதிலி ராஜலட்சுமி பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார். தனது கணவருக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இது குறித்து முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.