/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/periyakulam_3.jpg)
தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் அரசன் என்பவரின் மகன் சுதர்சன். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் மக்கள் தொடர்பு அலுவலராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கும் பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் பகவதியம்மன்கோயில் தெருவில் வசித்து வரும் ராமநாதன் என்பவரின் மகள் நவமணி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் கைப்பேசி மூலமாகவும், நேரடியாகவும் கருத்துகளை பரிமாறி காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் காதல் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதை அறிந்த காதலியின் சகோதரியும்,பெரியகுளம் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியருமான பிரமிளாதேவி மற்றும் அவருடைய தாயார் அழகம்மாள், தாய்மாமன் சேதுராஜ் என்பவருக்கும் தெரியவரும் போது வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலனை திருமணம் செய்யக்கூடாது என்று நவமணியை எச்சரித்துள்ளனர்.
அதேசமயம் சுதர்சன் மீது ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி காவல் நிலையத்திலும் கா.விளக்கு காவல் நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொய்யான புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை என்ற போர்வையில் அலைக்கழிப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் குண்டர்களை வைத்து பலமுறை சுதர்சனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேறு சமூகத்தைச் சார்ந்த சுதர்சனை பழிவாங்கும் நோக்கோடு தொடர்ந்து பொய் புகார் கொடுப்பதை தடுத்து நிறுத்தவும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டுமென கோரிதேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நவமணி, பிரமிளாதேவி, அழகம்மாள், சேதுராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணை செய்த பெரியகுளம் காவல்துறையினர், கடந்த 18- ஆம் தேதி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காதலன் சுதர்சனை சாதியை சொல்லி இழிவாக பேசியதாகவும் அவர்கள் வீட்டுக்கு வரவழைத்து தாக்கியதாகவும் சட்ட பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளான சுதர்சனின் காதலி நவமணிமற்றும் அந்த பெண்ணின் சகோதரி பிரமிளாதேவி, தாயார் அழகம்மாள், தாய்மாமன் சேதுராஜ் ஆகியோர்களை வலைவீசி தேடி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)