Skip to main content

சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

theni distrct, sothuparai reservoir opening cm palanisamy order

 

 

சோத்துப்பாறை அணையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இதுதொடர்பான முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடக்கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல்போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26/10/2020 முதல் 15/03/2021 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

 

இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்" இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணகி கோயில் திருவிழாவில் தமிழக - கேரள பக்தர்கள் வழிபாடு!

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

Tamil - Kerala devotees worship at Kannaki temple festival!

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கண்ணகி கோயில் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்றது. இக்கோயிலானது தமிழக- கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியான தேனி மாவட்டம், குமுளி அருகே அமைந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி மாவட்ட நிர்வாகம், கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகம் செய்தது. பக்தர்கள் கேரளாவின் குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப்பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும், சென்று வருகின்றனர். 

 

அதேபோல் தமிழகத்தின் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்தும் கண்ணகி கோவிலுக்கு சென்று  தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

Tamil - Kerala devotees worship at Kannaki temple festival!

மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பாகவும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சுமார் 1,500- க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியிலும், இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். மங்கலதேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  

 

தமிழக- கேரள மாநிலத்தை சுமார் 30,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகி அம்மனை வழிபட்டனர். அதே நேரத்தில் வருடத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா ஒரு நாளாக மாற்றப்பட்டு; நாளடைவில் மாலை 04.00 மணி வரை இருந்த அனுமதி நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது  இந்த ஆண்டில் அதற்கான அனுமதி நேரம் மதியம் 02.00 மணியாக குறைக்கப்பட்டதால் பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். 

Tamil - Kerala devotees worship at Kannaki temple festival!

இந்த கண்ணகி கோயில் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் தமிழக பத்திரிக்கையாளர்களை தேனியில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சரிவர மாவட்ட நிர்வாகமும், பி.ஆர்.ஓ.வும் ஏற்பாடு செய்யவில்லை. அதனாள் கண்ணகி கோவிலுக்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் வழக்கம் போல் செல்லும்போது கேரளா காவல்துறையினரும், வனத்துறையினரும் தமிழக பத்திரிக்கையாளர்களை கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் ஆவேசம் அடைந்த பத்திரிகையாளர்கள் குமுளியில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். 

 

 

Next Story

"எனக்கு சமமா உக்காந்து பீடி குடிக்கிறியா?" - ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய இளைஞர்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

THENI DISTRICT INCIDENT  POLICE INVESTIGATION

 

சமமாக அமர்ந்து பீடி குடித்த பட்டியல் இனத்தவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் அமர்ந்து புகைபிடித்துள்ளார். இதனைக் கணடு ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன், 'எனக்குச் சமமாக அமர்ந்து நீயும் புகைபிடிப்பதா?' எனச் சாதியின் பெயரைச் சொல்லித் திட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த பழனிச்சாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து விசாரணை நடத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ், அலெக்ஸ் பாண்டியன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, பழனி செட்டிப்பட்டி காவல்துறையினர், அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.