Thanjavur selected as the best corporation!

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திரதின விழாவில் தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான சிறப்பு விருதையும் 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்க இருக்கிறார். அதேபோல் சிறந்த நகராட்சிகளாக உதகை, திருச்செங்கோடு, சின்னமனூர் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த பேரூராட்சிகளாக திருச்சி கல்லக்குடி, கடலூர் மேல்பட்டாம்பாக்கம், சிவகங்கை கோட்டையூர் ஆகியவை தேர்வுசெய்யப்பட்டுள்ளன.