thanjai incident... Investigation of 3 persons!

தஞ்சை மாவட்டம் தோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சம்பத்தப்பட்ட இளம்பெண் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் வீட்டுக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது தோழகிரிபட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த குடியரசு என்ற இளைஞர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தன்னை வீட்டில் விடுவதாகவும் தன்னுடன் வரும்படியும் அந்த இளைஞர் அந்த இளம்பெண்ணிடம் கூற, அந்த பெண்ணோ மறுத்துள்ளார். இறுதியில் அப்பெண்ணின் கைப்பை மற்றும் செல்போனை குடியரசு பிடுங்கி கொள்ள அந்த பெண்ணும் அவருடன் இருசக்கர வாகனத்தில் செல்ல இசைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குடியரசு அந்த இளம்பெண்ணை அந்த பகுதியில் உள்ள முந்திரிதோப்புக்கு அழைத்து சென்றுள்ளார்.

Advertisment

இதனால் அச்சமடைந்த இளம்பெண் கூச்சலிட்ட நிலையில் அங்கே ஏற்கனவே குடியரசுவின் மூன்று நண்பர்கள் (சாமிநாதன், கண்ணன், தமிழரசன்) இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இளம்பெண்ணின் வாயினை கட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த இளம்பெண் தஞ்சை வல்லம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கண்ணன் என்ற நபர் தலைமறைவாகிவிட்ட நிலையில் மற்ற மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.