Skip to main content

வெள்ளம் பாதித்த திருக்கருக்காவூரில் ம.ஜ.க பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆறுதல்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

 thamimun Ansari visit flood affected in Thirukarukkavur

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் ம.ஜ.க பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவற்றைப் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்கு ம.ஜ.க பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆய்வு செய்தார்.

 

காலையில் தைக்கால், வடகால் பகுதிகளுக்குச் சென்றவர், மாலை திருக்கருக்காவூர் மற்றும் கீரானல்லூர் கிராமங்களுக்கு வருகை தந்தார். அங்கு வயலில் இறங்கி மூழ்கிய பயிர்களின் நிலை குறித்து விசாரித்தார். பிறகு அங்கிருந்த விவசாயத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களின் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார். பிறகு கீரானல்லூர் கிராமத்திற்கு வருகை தந்தார். இங்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கரீமா பர்வீன் ம.ஜ.க சார்பில் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 thamimun Ansari visit flood affected in Thirukarukkavur

 

அங்கு ம.ஜ.கவை சேர்ந்த, சபீர் அனைவரையும் வரவேற்று, கூட்டிச் சென்றார். அங்கு கிராம மக்கள் தங்கள் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதையும், கால்நடைகள் இறந்துள்ளதையும் சுட்டிக் காட்டினர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சீர்காழி தொகுதி பாரதி எம்.எல்.ஏ ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக எம்.எல்.ஏ கூறினார். அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் சங்கை தாஜுதீன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் ம.ஜ.க பேரிடர் மீட்புக் குழுவினரும் உடன் இருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர் கனமழை; இடிந்து விழுந்த பாலம்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Continuous heavy rain Collapsed bridge

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்தது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதே போன்று டீஸ்டா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிமில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 10 சேதம் அடைந்துள்ளது. அதோடு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. மேலும் பீகாரில் 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தமிழக முதல்வருக்குச் சபாநாயகர் அப்பாவு கடிதம்!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Speaker's father's letter to Tamil Nadu Chief Minister

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கும்பிகுளம், கோட்டை கருங்குளம், பெருங்குடி ஆகிய‌ கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பயிர் சேதம் குறித்தும், விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக முளைத்துவிட்டது. எனவே இத்தகைய சூழலைப் பேரிடராக கருதி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோருதல் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். 

Speaker's father's letter to Tamil Nadu Chief Minister

அதில், “திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால், நெற்பயிர்களும், வைக்கோலும்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, வேளாண் பயிர்கள் மழை நீரினில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. பணகுடிக்கு அருகிலுள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்த, நெல்மணிகள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதேபோல், இராதாபுரம் தாலுகா, கும்பிகுளம், பெருங்குடி. திசையன்விளை தாலுகா, கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

Speaker's father's letter to Tamil Nadu Chief Minister

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, சேதமடைந்துள்ளது. ஆகவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முழுவதும் ஏற்பட்டுள்ள நெல்மணிகளின் சேதத்தை ஆய்வு செய்து, இதனைப் பேரிடராக கருதி, அரசு உரிய அறிக்கை பெற்று, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழுமையான நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.