ஆலங்குளம் அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்தவர் முத்துராஜ் என்கிற ஆண்டவர். இவர், 2016- ஆம் ஆண்டில் உறவினர் பேச்சியம்மாளின் மகள் மாரியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பேச்சியம்மாள் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், ஆத்திரமடைந்த முத்துராஜ், பேச்சியம்மாள், அவரது கணவர் கோவிந்தசாமி, மகள் மாரி ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

Advertisment

tenkasi district court judgement three person incident case

இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று (28/02/2020) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், குற்றவாளியான முத்துராஜூவுக்கு இந்திய தண்டணை சட்டம் 302 பிரிவின் கீழ் தூக்கு தண்டணை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Advertisment