Skip to main content

கரோனா அடைப்பைப் பயன்படுத்தி கோயில் நகை கொள்ளை... ஊழியர்களே கொள்ளையர்களான கொடுமை!

Published on 13/12/2020 | Edited on 13/12/2020
Temple jewelery robbery using corona block ... Employees are robbers cruel!

 

ஆலயத்தையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்கிற வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது.

 

நெல்லை மாவட்டத்தின் பாவங்களை நாசம் செய்யும் பரிகாரதலம் பாபநாசம். தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற தாமிரபரணி தரையிறங்கி முதன் முதலாகப் பாய்கிற முகத்துவாரம் பாபநாசம். அந்நதி ஓடுகிற கரையோரம் சிவபெருமான் வீற்றிருந்து, அருட்பாலிக்கிற பாபநாச சுவாமி கோவிலிருக்கிறது. பாவங்களையும், கர்மவினைகளையும் போக்குவதற்காக ஆற்றில் குளித்துவிட்டு அருகிலுள்ள பாபநாச சிவனை வழிபடுவது பக்தர்களின் மரபு.

 

ஆனால் காலப் போக்கில் பாபநாசம், மறைந்த பிதுர்களுக்கான தர்ப்பணம் செய்துவிட்டு ஆலய வழிபாடு நடக்கிற அளவுக்கு மாறியதன் விளைவு அன்றாடம் பரிகார யாகம் நடத்தும் பொருட்டு பக்தர்கள் திரளும் நிலை என்றாகிவிட்டது. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவ பரிகாரத்தலம் என்பதால், ஆதிகாலத்திலேயே ஆண்ட மன்னர்கள் தங்கமும், வைரங்களையும் ஆலயத்திற்கு தானமாகவே வழங்கியிருக்கிறார்கள். ஆலயப் பெட்டகங்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவைகளின் மதிப்பு அளவிட முடியாதவை என்கிறார்கள்.

 

இந்நிலையில் கடந்த மார்ச் 25 முதல் ஆக 31 வரை கரோனாத் தொற்று காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட்டு ஆலயங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. ஆலயத்திற்கு பக்தர்கள் வரத்தடை என்பதால் அங்கு ஆலய உழியர்களைத் தவிர வேறு ஆட்கள் நடமாட்டமில்லை 7 மாதங்கள் பூட்டப்பட்ட நிலையில் லாக்டவுண் வாய்ப்பைப் பயன்படுத்திய பாபநாசம் கோவில் ஊழியர், பூசாரி இருவரும் சேர்ந்து ஆலய நகைகளைத் திருடி நாகர்கோவிலில் விற்றுள்ளனர்.

 

பெட்டகத்தின் சாவி கோயில் செயல் அலுவலர் ஜெகநாதனிடம் தானிருப்பது வழக்கம். பெட்டகம் உடைக்கபட்டதா, கள்ளச் சாவி போடப்பட்டதா என்ற விபரம் தெரியவில்லை அறிவிக்கப்படவுமில்லை. ஆனால் செயல் அலுவலர் ஜெகநாதன் நகைளைச் சரிபார்க்கையில் நகைகள் களவு போனது தெரியவர, அவர் வி.கே.புரம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில் போலீசார் ஆலய ஊழியர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். களவு போனது 25 பவுன் நகை என்று சொல்லப்பட்டாலும் அதனையும் தாண்டிய அளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை நடத்தினால் கொள்ளைபோன நகையின் அளவு தெரியவரும். பலர் சிக்குவார்கள். துணை ஆணையர் அளவிலான அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் சரிபார்த்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.