Skip to main content

ஆலயக் கல்வெட்டு சிதைப்பு... ஆதாரத்தை மறைக்க முயற்சியா...?

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

சைவம் பெரிதா வைணவம் பெரிதா என இரு தரப்பினருக்கும் பல நூறு ஆண்டுகளாகவே பிரச்சனை இருந்துவந்தது. பின்னர் யார் பெரியவர் என்ற ஈ.கோ காரணமாக சர்ச்சைகள் வெடித்தது. பின் இரு தரப்பினரிடையே மோதலாக உருவெடுத்தது. இரண்டு தரப்புகளும் மோதிக் கொண்டதில் ரத்தமும், சதையும் தெறித்தது. பச்சை மண்ணில் ரத்த ஆறு ஓடியது. அப்படிப்பட்டதொரு வன்முறை.

 

inscription

 

இவர்களின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய கைலாய நாதரான சிவபெருமான் தன் உடம்பில் ஒரு பாதியை சிவனாகவும், மறு பாதியை விஷ்ணுவாகவும் ஒரு சேர உருவெடுத்துப் பக்தர்களுக்குக் காட்சியளித்தவர்.
 

சிவனும் விஷ்ணுவும் வெவ்வேறல்ல. அது போன்றே சைவமும், வைணவமும்  தனித் தனியானவை அல்ல. அனைத்தும் ஒன்றே என்ற அருள்வாக்குடன் சர்வேஷ்வரன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதன் பிறகே ரத்தக் களறி ஓய்ந்தது. கல்ப கோடி காலத்திற்கு முன்பு சிவபெருமான் இது போன்று பக்தர்களுக்குக் காட்சியளித்த பூமிதான் நெல்லை மாவட்டத்தின் சங்கரநயினார் கோவில். இங்கே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் சிவ பெருமான், சங்கரலிங்க சங்கரநாராயணர், ஸ்ரீ கோமதியம்பிகை என மூன்று தெய்வங்களுக்கான மூன்று மிகப் பெரிய சன்னிதானங்களைக் கொண்ட ஸ்ரீ சங்கரநயினார் ஆலயத்தை உருவாக்கியவர் மாமன்னன் உக்கிர பாண்டியன். மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்கும் ஆலயம்.
 

காலங்கள் கடந்தும் வரலாற்று சிறப்புடன் இருக்கும் அந்த ஆலயத்தின் மத்தியில் அமைந்திருக்கிற ஸ்ரீ சங்கர நாராயணர் சன்னதியின் தென் பக்கவாட்டுச் சுவரில் பண்டைகாலத் தமிழ் எழுத்தைக் கொண்ட கல்வெட்டு இருந்தது. இந்த ஏப்ரலில் சில நாட்களுக்கு முன்பு இந்தக் கல்வெட்டின் எழுத்துக்கள் சில குதறப்பட்டுப் பாதியாகக் காட்சியளித்ததைக் கண்டு அதிர்ந்து போன நகரின் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குழு, அந்த எழுத்துக்களின் வரலாற்றைக் கண்டுபிடிப்பதற்காக கல்வெட்டின் படங்களை தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
 

முன்பு முழு எழுத்துக்களுடன் காணப்பட்ட கலவெட்டில் பாதி எழுத்துக்கள் கொத்திக் குதறப்பட்டது போன்று தெரிகிறது. அதன் அடையாளங்களையும், அது தொடர்பான காலங்களையும் அறிந்து கொள்ளவே ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் ஆலயக் கல்வெட்டுச் சிதைப்பு, ஆதாரங்களை, வரலாற்றுகளை அழிக்கிற முயற்சியா என்கிற சந்தேகம் கிளம்பியிருக்கிறது என்கிறார் அந்தக் குழுவின் பொறுப்பாளர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.

Next Story

900 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
900 year old Tamil inscription discovered!

சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத் தலைவர் தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின் பேரில் பொறுப்பு ஆசிரியர்களான அன்பரசி, விஜயகுமார் ஆகியோரிடம் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி இப்பள்ளியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பாணாபுரம் என்ற கிராமத்திற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணம் சென்றனர். 

அங்கு மாணவர்கள் காட்டிய விவசாய நிலத்திற்குள் ஒரு தமிழ் கல்வெட்டு காணப்பட்டது. கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்து கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது. ஆசிரியர் அன்பரசி கல்வெட்டு படி எடுத்து ஆய்வு செய்து பார்த்ததில் அது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு என்பதை அறிந்து, படி எடுத்த கல்வெட்டை அதன் விபரங்களை அறிந்து கொள்ள சென்னை தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர் முனைவர் சு. ராஜகோபால் அவர்களிடம் படிக்கச் சொல்லி கூடுதல் தகவல் பெற்றுள்ளனர்.

900 year old Tamil inscription discovered!

அதாவது, பூமிக்கு மேல் நின்ற நிலை உள்ள செந்நிற பலகை கல் 3 அடி உயரமும் 2.5 அடி அகலமும் உடைய கல்லில் 12 வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதில் கொங்கு வீரபாண்டியன் ( 1265 + 21 = 1286 ) பொது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து இறைவனுக்கு வாணாபுரம் (பாணாபுரம்) தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது. கொடுத்தவர் அரசனாக இருக்கலாம். நாடும் வண்ணவுடையும் கொடுத்திருக்கலாம் என்ற செய்தி கல்வெட்டில்  உள்ளது. கல்வெட்டில் வாணாபுரம் என்று உள்ளது தற்பொழுது பெயர் மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது என்பதும் தெரிய வந்தது.