இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு குழு சார்பில், சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட நேற்று குடும்பத்துடன் வந்தவர்களை போலீசார் கைது செய்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்தனர். அங்கு அவர்கள் கோரிக்கை அடங்கிய பதாகை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் மயக்கமடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்: மயக்கமடைந்ததால் பரபரப்பு
Advertisment