Skip to main content

"இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" -தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
ddd

 

"இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர்.

 

அரசாணை 100/27.06.2003 ன் படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு இளநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை 2004 இல் நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் ரூ 4,000 என்ற ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்தார்கள்.

 

அப்பொழுது,  அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடுத்த தகுதியில் இருந்தார்கள்.

 

 5 ஆண்டுகள் கழித்து ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் திமுக ஆட்சி காலத்தில் அடிப்படை ஊதியம் 4625 -125- 7000 என்ற புதிய விதத்தில் 2006 முதல் முதல் காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.

 

அச்சமயத்தில், தமிழக அரசு 57, 179 பணியிடங்கள் தொடக்கக்கல்வி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்தார்கள்.

 

அதில், பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 40,000 பேர் இதில் அடங்கும். தமிழக அரசின் கல்விக் கொள்கையின் படி எந்த ஒரு காலி பணியிடங்களை நிரப்பும்போது அத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 50% பதவி உயர்வு மூலமாகவும் 50 சதவீதம் நேரடி நியமனம் என்ற முறையிலும் நியமனம் செய்து வந்தார்கள்.

 

அவ்வாறு, நியமனம் செய்யும்போது அக்காலக்கட்டத்தில் 40,000 பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும்போது பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 25,000 இடைநிலை ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களில் 40,000 பட்டதாரி ஆசிரியர்களில் 50% சதவீதம் என்றால் கிட்டத்தட்ட 20,000  இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் சென்றிருப்பார்கள்.

 

தற்சமயம் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறையில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 

 

அச்சமயத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 90% பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி பெற்றிருந்தார்கள்.

 

அரசு காலங்காலமாக விகிதாச்சார முறையில் அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து கொண்டிருக்கும் எனக் கூறும் அரசு இதன் அடிப்படையில் பதவி எதுவும் வழங்கவில்லை.  அதாவது, விகிதாச்சார அடிப்படையில் தமிழ் பயின்றவர்களுக்கு 66.66%  பேரும் மற்ற பாடங்களுக்கு 50%  பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். 

 

ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை காரணம் என்னவென்றால் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரியாக உள்ளது என்று ஒரு கணக்கை காட்டுகிறார்கள்.  உபரி என்ற பணியிடம் தமிழகத்தில் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் உபரி என்று கூறியிருப்பது மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது.

 

மேலும்,  ஆண்டுதோறும் வழங்கி வந்த பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 4 ஆண்டுகாலமாக நடத்தவில்லை.

 

தொடக்கக் கல்வித்துறையில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர், ஓய்வு பெறும் நிலையில் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று விடுவார்கள். ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் இறுதிவரை இடைநிலை ஆசிரியராக இருந்து ஓய்வுபெறும் அவலநிலை  பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உண்டு.

 

தமிழக அரசின் அரசாணை 669 கல்வித்துறை நாள் 25/ 4 /1979 இன் படி இளநிலை ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியராக உட்படுத்தியது போலவும், அரசாணை 720 கல்வித்துறை நாள்  28/04/ 1981 மேல்நிலைக்கல்வி உருவாக்கப்பட்டபோது மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உட்படுத்தப்பட்டது போலவும், அரசாணை எண் 69 கல்வித்துறை நாள் 29/0 7 /2007 இன் படி தொழிற்கல்வி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஊதிய விகிதம் வழங்கப்பட்டது போலவும், உயர்நீதிமன்ற ஆணை 2007இன் படியும் மேற்கண்ட உதாரணங்களில் அடிப்படையில் 20,000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இக்கருத்தினை பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

 

 இது, சார்பாக கடந்த காலங்களில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், 2006க்கு பிறகு தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இன்றுவரை இருக்கும் அனைத்து கல்வித்துறை அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். ஆர்ப்பாட்டங்கள்  நடத்தியும் தமிழக அரசுக்கு தெரிவித்தும் இதுவரை அரசு பாராமுகமாகவே உள்ளது .

 

6,7,8  வகுப்புகள் கற்பிக்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு விதமான சம்பளமும் அதேப்பணியை செய்யக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருவிதமான சம்பளமும் தமிழக அரசு வழங்கி வருகிறது

 

ஒரே வேலைக்கு இருவேறு ஊதியம் வழங்கி வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது நியதி. 

 

அதுபோல,  அரசு பணியாளர் சீர்திருத்த விதிகளின்படி அரசுப்பணிகளில் மூன்று பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பது விதி.  அதையும் தமிழக அரசு  பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டது.

 

பணியில்  சேரும்போது இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்றவர்கள், பத்தாண்டுகளில் காலம் கழித்து இடைநிலை ஆசிரியர், 20 ஆண்டுகள் கழித்தும்  அவருடைய பணிநிலை இடைநிலை ஆசிரியர். 

 

முதலில்,  எவ்வாறு பணியில் சேர்ந்தார்களோ இறுதிவரை அதே நிலையில் இருந்து ஓய்வுபெறுகிறார்கள். இந்த அவலநிலை பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு  உள்ளது.

 

இறுதியாக, தற்சமயம் மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடுத்துள்ளோம். (வழக்கு எண் W.P.(MD)13568/2020) நீதியரசர் எங்களுக்கு நல்லதோர் தீர்ப்பு வழங்குவார் என்றும் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் (அரசுப்பள்ளியில் 7000 நபர்களும் அரசு உதவி பெறும் பள்ளியில் 13,000 நபர்களும்) நம்பிக்கையில் உள்ளார்கள்.  நம்பிக்கை என்றும் வீண் போனதில்லை தொடர்ந்து முயற்சி செய்கிறோம் என்று மன உறுதியோடு இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு எங்கள் மீது பார்வையைத் திருப்பி எங்களின் அவல நிலையை போக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் அ.சங்கர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மீனவர்கள் விவகாரம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Regarding the issue of fishermen, CM MK Stalin insistence

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரியிருந்தேன். இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் ஆகும். எனவே இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதன்மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.