Skip to main content

ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை; மொட்டை மாடியில் பதுங்கிய நபர் கைது 

 

Teacher strangled to for not paying; Police investigation

 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் குலசேகரப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்த்தபொழுது ஆசிரியை மெட்டில்டா உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

 

வீட்டின் மொட்டை மாடி பகுதியில் ஆசிரியரின் உறவினரான கன்னியாகுமரியை சேர்ந்த தீபக் என்பவர் மறைந்திருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியை மெட்டில்டாவிடம் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் தீபக் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து தீபக்கை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !