Skip to main content

“ஓராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்” - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Tariff hike twice in one year will have serious consequences says Communist Party of India

 

ஓராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என வெளியான செய்தியை அரசு தரப்பில் மறுத்து வந்தனர். ஆனால், இன்று அது உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

ஓராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மின்வாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழிகள் குறித்து ஆராய வேண்டும். குறிப்பாக தனியாரிடம் கொள்முதல் செய்யும் விலை குறைப்பு உள்ளிட்ட வழிகள் குறித்து பரிசீலிக்க வேண்டும். அதனை தவிர்த்து மின்வாரிய கட்டண உயர்வு முன்மொழிவை ஏற்கக் கூடாது; அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' - தமிழக முதல்வர் அறிவுறுத்தல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

storm warning; Chief Minister's insistence

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். கனமழையால் மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அரசு துறைகள் ஒருங்கிணைந்து தயார் நிலையில் உள்ளது. உணவு, உடை, மருத்துவம் ஆகிய அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் நிவாரணப் பணிகளை செய்திட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் நின்று மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் புகுந்த பாம்பு; அதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 A snake entered the Secretariat; The officers ran screaming

 


சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலாளர் அலுவலகத்திற்குள் சாரைப்பாம்பு புகுந்ததாக தீயணைப்பு மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தீயணைப்புத் துறையினர் உடனடியாக பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் உள்ளே சென்றுள்ளனர்.

 

ஒவ்வொரு அறையாகச் சென்ற அந்த சாரை பாம்பு அலுவலகத்திற்கு வெளியே உள்ள புல்வெளிக்குள் புகுந்துள்ளது. புல்வெளியில் சிக்கி உள்ள சாரை பாம்பை தேடும் பணியில் காவல்துறையினரும், தீயணை துறையினரும் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அங்குள்ள அலுவலர்கள், ஊழியர்கள் மட்டத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்