kalaignar

முத்தமிழறிஞரும் திமுகதலைவருமான கலைஞர் மறைவையொட்டி இதய அஞ்சலி கூட்டம் நேற்று இரவு பஹ்ரைன், இந்தியன் கிளப்பியில். தொழில் அதிபரும், பஹ்ரைன், பாரதி தமிழ் சங்கத்தின் நிறுவருமான முஹம்மது மாலிம் ஹுசைன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Advertisment

அந்நாட்டில் வாழும் தமிழர்கள் பெரும் பாலானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதுபோல் இந்திய தூதரக முதன்மை செயலர்.ஆனந்த் பிரகாஷ்,இந்தியன் கிளப் தலைவர், பஹ்ரைன் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் பஹ்ரைன் தலைவர், இந்தியன் பள்ளி செயற்குழு உறுப்பினர்கள், இந்தியன் சோசியல் போரம் பஹ்ரைன்,

Advertisment

மதிமுக, காயிதே மில்லத் பேரவை மஜக , மமக,தமிழ் மன்றம்,தமிழ் சங்கம், கலைஞர் செம்மொழிப் பேரவை மற்றும் முத்து தீவு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலைஞருக்கு நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்கள்