தமிழகத்திலேயே அதிக வெப்பமான மாவட்டம் வேலூர் மாவட்டமாகும். மார்ச் மாதம் தொடங்கிய இந்த அதிக வெப்பம் மெல்ல மெல்ல உயர்ந்துக்கொண்டே தான் செல்கிறது. தற்போது கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. மே 29ந்தேதி வரை இந்த கத்தரி வெயில் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என வேலூர் மாவட்ட மக்கள் பயந்துக்கொண்டிருந்தனர்.
கடந்த வாரத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் பகுதிகளில் ஒரளவு மழை பெய்தது. இந்நிலையில் மே 5ந்தேதி இரவு வேலூர் மாநகரில் மழை கொட்டோ கொட்டென கொட்டி தீர்த்தது. அதுவும் பனிக்கட்டி மழை என்கிற ஐஸ் மழை பெய்தது. மக்கள் தட்டில் வாரிப்போட்டு வைக்கும் அளவுக்கு ஐஸ் கட்டிகள் இருந்தன.
ஏதோ தூரலாக போட்டுவிட்டு செல்லாமல் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ய வேலூர் வாசிகள் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர். லேசாக தூரிவிட்டு சென்றுயிருந்தால், வெக்கை அதிகமாகி இரவில் தூங்க முடியாத நிலையை உருவாக்கியிருக்கும். நன்றாக மழை பெய்ததால் அனல் குறைந்து, குளிர்காற்று வீசத்தொடங்கியுள்ளது. இதனால் ஒருவாரத்துக்கு ஒரளவுக்கு உடல் அனல் சூட்டில் இருந்து தப்பிக்கும் என்கிறார்கள்.