Skip to main content

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்! (படங்கள்)

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

 

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு தன்னிச்சையாக 10% தீபாவளி போனஸ் அறிவித்ததை எதிர்த்து போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சென்னை, மதுரை, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மண்டல பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20% தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 பெண்களை ஏற்றிச் செல்லாத பேருந்து; ஓட்டுநர் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Action on the driver for A bus that does not carry women

விக்கிரவாண்டி பகுதியில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பேருந்து ஒன்று கடந்த 22ஆம் தேதி, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது, அந்தப் பேருந்து பை பாஸ் வழியாக செல்லும் போது அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறப்பட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

அந்தப் புகாரின் பேரில், பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘22.04.2024 அன்று விழுப்புரம் கோட்டம் விழுப்புரம் கிளை 2-ஐ சார்ந்த டிஎன்32/ என்.2218 தடம் எண்.TIF விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் வரும்பொழுது சுமார் 8.00 மணியளவில் விழுப்புரம் பைபாஸ் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஊடகத்தின் வாயிலாக புகார் செய்தி வெளிவந்தது. 

அதன் அடிப்படையில், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மண்டல பொது மேலாளர் உத்தரவின்படி அப்பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஆறுமுகம், தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நடத்துநர் தேவராசு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.