Skip to main content

+1, +2 வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்களாக குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அதே போல் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியல், கணிதப்பாடங்களை படிக்கலாம்.

tamilnadu schools 11th,12th std students attend the board exam 500 total score


மேலும் மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய நடைமுறை வரும் 2020-2021 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு முதன்மை செயலர் குறிப்பிட்டுள்ளார்.  


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘+12 துணைத் தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு...’ - வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Important Notice Released of +12 Supplementary Exam Aspirants

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி காலை 09.30 மணிக்கு வெளியாகி இருந்தது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்தனர். 

தொடர்ந்து இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அட்டவணை மே 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு வரும் மே 16ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும், தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள்  இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், +2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று (19-06-24) பதிவிறக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, ‘பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.