/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Adcafafasfafa.jpg)
நடிகர் சத்யராஜின்மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா காலத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க 'மகில்மதி' என்ற இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்.சில வருடங்களுக்கு முன் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் விவசாயத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.திவ்யா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன் அடுத்த தேர்தலில்சத்யராஜ் மகளுக்குபிரச்சாரம் செய்வார் என்ற செய்தி பரவி வருகிறது. சத்யராஜ் மிகச்சிறந்த புரட்சிகரமான பேச்சாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதைப் பற்றி கேட்க திவ்யாவை தொடர்புகொண்டோம், ''அப்பா என் உயிர் தோழன்,என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் I am a selfmade, independent person, சொந்த வளர்சிக்காக ஒருபோதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்'' என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)