Tamilnadu medical student passed away in Jharkhand

Advertisment

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தமிழகத்தைச் சேர்ந்தமருத்துவ மாணவரில் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மதன்குமார் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் மாணவர் மதன்குமார் உடல், கல்லூரி விடுதி அருகே கிடந்துள்ளது. இது குறித்ததகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதன்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது அறைக்குச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் ஆயில் இருந்தாகக் கூறப்படுகிறது. மாடியில் இருக்கும் அவரது அறையின் ஜன்னல் வழியாக கிழே விழுந்திருப்பாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.