Skip to main content

பி.இ. சேர்க்கை: சான்றிதழ்களை இன்றுமுதல் பதிவேற்றலாம்; கவனிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

Anna University

 

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இன்று (ஜூலை 31) முதல் இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 20ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 530 பொறியியல் கல்லூரிகளில் 2.63 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த ஏஐசிடிஇ அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 1,21,000 மாணவர்கள் இன்ஜி., சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 

கரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சரிபார்ப்பு பணிகள் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் வீட்டில் இருந்தே ஆண்ட்ராய்டு செல்போன் அல்லது கணினி மூலமாக தேவையான சான்றிதழ்களை www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.

 

இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 20 ஆயிரம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும். அதற்கேற்ப வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த வரிசை எண்களுக்கு உரிய நபர்கள், அந்தந்த நாளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். மேற்படி இணையதள பக்கத்தில் இதற்கான அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அட்டவணைப்படி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய முடியாதவர்கள், வரும் 12.8.2020 முதல் 20.8.2020 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 

சான்றிதழ் பதிவேற்ற வழிமுறைகள்:

 

1. மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நாட்களில் தங்களுடைய www.tneaonline.org என்ற அக்கவுண்டில் Login செய்து வரும் பக்கத்தில், ''Upload Certificates'' அல்லது Click here to upload certificates என்கிற லிங்க்கை Click செய்து சான்றிதழ் பதிவேற்ற பக்கத்திற்கு செல்லலாம்.

 

2. சான்றிதழ் பதிவேற்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை (Instructions) நன்றாக படித்து கொள்ளவும்.

 

3. பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை Digital Formatல் வைத்துக்கொள்வது அவசியம். சான்றிதழ்கள் அனைத்தும் PDF அல்லது Image Formatல் (JPG, PNGப, JPEG) இருத்தல் அவசியம். சான்றிதழின் அளவு 150 KBயில் இருந்து 1 MBக்குள் இருக்க வேண்டும்.

 

4. மாணவர்களின் புகைப்படம் கையொப்பம் இமேஜ் பார்மட்டில் (JPG, PNG, JPEG) இருக்க வேண்டும். சான்றிதழின் அளவு 20 KB முதல் 50 KB அளவுக்குள் இருக்க வேண்டும்.

 

5. மாணவர்கள் தங்கள் சான்றிதழ்கள் அனைத்தையும் ஒரே Folderல் உங்கள் கணினி அல்லது செல்போனில் வைத்துக் கொள்ளவும்.

 

6. ஒவ்வொரு மாணவருக்கும் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின்படி, கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களும் இருக்கும். தங்கள் விருப்பத்திற்கு பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களும் உண்டு.

கட்டாய சான்றிதழ்கள் எவை எவை?: எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் (SSLC mark sheet) 11ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (11th mark sheet only for TN state board) 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (12th mark sheet), சாதிச்சான்றிதழ் (ஓ.சி., தவிர்த்து) (Community Certificate).

இதர சான்றிதழ்கள்: மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate - optional) பிறப்பிடச் சான்று - (தமிழக மாணவர்கள் குறைந்தது ஏதேனும் ஒரு வருடம் 8ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்புக்குள் பிற மாநிலத்தில் படித்திருந்தால்) பெற்றோர் வேலை சான்று - (பிற மாநில மாணவர்களின் பெற்றோர் தமிழகத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணி காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்ததற்கான சான்று) இலங்கை அகதிகள் சான்று - (இலங்கை அகதிகளுக்கு மட்டும்) முன்னாள் படைவீரர் சான்று - (Opted EX-Servicemen Category as 'Yes') மாற்றுத்திறனாளி சான்று - (Differentky abled Category as 'Yes') மாணவர் புகைப்படம், மாணவர் கையொப்பம்

 

7. உங்கள் பதிவேற்ற பக்கத்தில் ஒவ்வொரு சான்றிதழாக நீங்கள் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு சான்றிதழுக்குக் கீழ் உள்ள Upload என்னும் பட்டனை கிளிக் செய்தால், திறக்கும் Windowவில் உங்கள் கணினி / செல்போனில் சான்றிதழ் இருக்கும் Folderரை தெரிந்தெடுத்து சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்யவும்.

 

8. பதிவேற்றம் அடைந்த சான்றிதழ் சரியானதா என்று அதை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.

 

9. இதேபோல் தேவையான அனைத்து சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை மேற்கூறியபடி பதிவேற்றம் செய்யவும்.

 

10. அனைத்து கட்டாய சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் அனைத்தையும் பதிவேற்றம் செய்ததும் ''Freeze Upload'' என்னும் பட்டனை கிளிக் செய்து உங்கள் உறுதிமொழியை ஏற்று 'Confirm' என்னும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

 

11. பதிவேற்றம் 'Freeze' செய்யப்பட்ட பின் மாணவர்களால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. ஆனால் தாங்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களை பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்...” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Anna University professors say they will struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும், மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழளளங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ரூட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட. 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம் (டீனிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.