Skip to main content

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  சத்யபிரதா சாஹு நாளை ஆலோசனை!

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

Satyaprada Sahu to consult with recognized political parties tomorrow!

 

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தயிருக்கிறார். 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 12 மணிக்கு சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் அவர் ஆலோசிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

Next Story

“திறன் மிக்க வாக்காளராகுங்கள்” - கையேடு வெளியீடு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Become an Effective Voter  Handbook Release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான சத்யபிரதா சாகு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “திறன் மிக்க வாக்காளராகுங்கள்” என்ற வாக்காளர் கையேட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25.03.2024) வெளியிட்டார்.

இந்த கையேட்டில், “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.