
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று நடிகர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு செய்தியாளர்களை சந்தித்தசரத்குமார், 'வரும் சட்டமன்ற தேர்தலில்சமக உடனும், ஐ.ஜே.கேஉடனும்மக்கள் நீதி மய்யம்கூட்டணி அமைத்துக் கொள்வது குறித்துபேசப்பட்டதாகவும்,கமல் ஒரு நல்ல முடிவை தெரிவிப்பார்'என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐ.ஜே.கே மற்றும் சமகவுடன் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இதற்கான அவசர நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்களுடன் நல்லவர்கள் யார் கூட்டணிக்கு வந்தாலும் வரவேற்போம் என தேர்தல் பிரச்சாரங்களில் கமல் கூறியிருந்தார். இன்று கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்த அவசர கூட்டத்தில் கூட்டணி இறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)