உலகின் மேம்பட்ட நாகரீகம் தமிழருடையதே என்பதற்கு அடையாளமாய் தோண்ட தோண்ட புதையலாய், அகழாய்வில் பல ஆச்சரியங்களை அளித்து வருகின்றது சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி. இங்கு கிடைத்த அடையாளங்களையும், பொருட்களையும் தொல்லியல் துறை சார்ந்த தமிழக, கேரள அதிகாரிகள் ஒன்றிணைந்து நேரடியாகவே களத்திலிறங்கி ஆய்வினை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் உலகின் தொன்மையான நாகரீகத்தினை அறிய பல கட்டமாக அகழாய்வு பணி நடைப்பெற்று வருகின்றது. உலகின் முதல் மற்றும் தொன்மையான நாகரீகம் தமிழருடையதே என்பதை பறைச்சாற்றும் விதமாக பல அடையாளங்களும், பொருட்களும் இங்கு கிடைக்கப்பெற்று ஆச்சரியமளிக்க, தமிழக தொல்லியல் துறையோ கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 47 லட்ச ரூபாய் செலவில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் 39 குழிகள் ( 10.2 மீட்டர் நீள அகலம் உள்ளது) தோண்டப்பட்டு தனது ஐந்தாவது கட்ட அகழாய்வை துவக்கியது. இது குறித்து நக்கீரன் இணையத்தளத்தில் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றோம். அகழாய்வின் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று தமிழக தொல்லியல் துறை கமிசனர் உதயசந்திரன் இணை இயக்குனர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி உள்ளிட்டோருடன் கேரள மாநில தொல்லியல் துறை நிபுணர் செரியனும் இணைந்து அகழாய்வை பார்வையிட்டனர்.
நீதியம்மாள், முருகேசன் ஆகியோரது நிலங்களில் கிடைத்த செங்கல் கட்டுமானம், சுடுமண் குழாய் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர்கள் அகழாய்வு பணி குறித்து கேட்டறிந்ததது மட்டுமில்லாது, அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்களையும் நேரில் பார்வையிட்டு ஆர்வத்துடன்ஆய்வு செய்தனர். இதில் அரை இஞ்ச் சுடுமண் பானை, வராக உருவம் சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் என்பன அதிகாரிகளை ஆச்சர்யமளித்தது.
இதுகுறித்து பேசிய தமிழக தொல்லியல் துறை கமிசனர் உதயசந்திரனோ, " இரட்டை சுவர், உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் கிடைத்துள்ளன. 4ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் விபரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது .கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தாண்டு அகழாய்வு செய்ய உள்ளோம், கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்து தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதுகுறித்து உலக அளவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாலேசிக்க உள்ளோம், அதன்பின் முடிவுகள் வெளியிடப்படும்." என்கிறார் அவர். செப்டம்பர் மாதத்தோடு 5ம் கட்ட அகழாய்வு முடிவுபெற உள்ளதால் அகழாய்வு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.