tamilaruvi manian press meet at chennai poes garden

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்தது.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழருவி மணியன், "ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது எனக்கு தெரியாது; அவருக்கு தான் தெரியும். உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினேன். ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்; தமிழக மக்களிடம் எதையும் அவர் மறைக்க தேவையில்லை" என்றார்.

Advertisment