Skip to main content

''தமிழ் இனிமையான மொழி'' - ஆளுநர் உரையுடன் துவங்கியது சட்டப்பேரவை கூட்டம்!   

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

'' Tamil is a sweet language '' - The meeting of the legislators started with the speech of the Governor!

 

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் கூடியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். ஐடி கார்டு பெற்ற கரோனா இல்லாத எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

 

தற்போது சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவர் உரையாவது, ''தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் - பெண் சமத்துவம். அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அரசின் ஒவ்வொரு செயலும் சட்டமும் திட்டமும் முயற்சியும் இந்த கொள்கைகளைக் கொண்டிருக்கும்.  தனக்கு வாக்களித்தோர் என்றும் வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.  தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக பயன்படுத்த அரசியல் சட்டத்தில் 343வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும். 

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசுக்குத் தேவைப்படும் பல்வேறு கோரிக்கைகளைப் பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டின் நிதி நிலையைக் குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளது.

 

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் மீதான புகார்களை விசாரிக்கும் லோக்ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதிகாரம் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு விழிப்புப் பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் விசாரிக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டுவந்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவோம். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும்.  நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையைப் பெற்று சட்ட முன்வடிவுக்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.

 

உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு முறையாக இருப்பதை உறுதிசெய்த பின்னர் தேர்தல் நடத்தப்படும். கரோனா தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும். பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்' - முதல்வர் பேச்சு  

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
'We must not lose sight of any place' - Chief Minister's speech

தர்மபுரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் சென்றுள்ள நிலையில் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' தமிழக முதல்வரால் தர்மபுரியில் உள்ள ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிகழ்வாக 445 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தர்மபுரி - திருவண்ணாமலையில் நான்கு வழிச் சாலை, அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கான 20 பேருந்துகளையும் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். 56 கோடி ரூபாய் மதிப்பில் 2,637 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.

தொடர்ந்து தர்மபுரியில் திட்டங்களை துவக்கி வைத்த பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ''ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் இருக்கக்கூடிய எல்லா காரியங்களையும் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னேன். உங்கள் முன்னாடி அந்தப் பெட்டியை பூட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பாக வைத்தோம். உடனடியாக எதிர்க்கட்சிகள் என்ன பேசினார்கள் 'இவர்கள் ஆட்சிக்கும் வரப்போவதில்லை; இந்த பெட்டியையும் திறக்கப் போவதில்லை' என்று இறுமாப்பில் கேலி செய்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால் பொதுமக்களாகிய நீங்கள் திமுக மேல், என் மேல் நம்பிக்கை வைத்து அந்த கேலி மனிதர்களை தோற்கடித்து எங்களுக்கு பெரிய வெற்றியை தேடித் தந்தீர்கள்.

nn

ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காக ஒரு புதிதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையினுடைய பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் துறைவாரியாக பிரித்து அதிலிருந்து நடைமுறை சாத்தியமுள்ள 2, 29216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டுள்ளோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலுக்கு முன் வாங்கிய மனுக்களுக்கு தீர்வு கண்டதுடன் எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கவில்லை. இனிமேல் தான் கடமை தொடங்குகிறது என நினைத்து உழைப்பை கொடுக்கிறோம்.

அதனால்தான் தொடர்ந்து மனுக்களை வாங்கி வருகிறோம். அதை முறைப்படுத்த வேண்டும். எப்படி எல்லாம் முறைப்படுத்த வேண்டும் என்று சொன்னால் முதலமைச்சருடைய தனிப்பிரிவு; முதலமைச்சரின் உதவி மையம்; ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு; உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 'முதல்வரின் முகவரி' என்ற ஒரு புதிய துறையை உருவாக்கினோம். பொது மக்களுடைய கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களுடைய பார்வையில் இருந்து தவறி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம். முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்படக்கூடிய மனுக்கள் மட்டுமல்லாமல், இணையதளம், அஞ்சல், சமூக வலைத்தளம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள் இப்படி எல்லாம் மனுக்களையும் ஒரே இடத்தில் போய் சேருகிறது. மக்களால் தரப்படும் அனைத்து மனுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம். எல்லா மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்து விட்டது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 'முதல்வரின் முகவரி' துறையின் கீழ் இப்பொழுது வரைக்கும் பெறப்பட்ட 68,30,281 மனுக்களில் 66,65, 304 மணிகளுக்கு உரிய முறையான தீர்வு கண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தோல்வியை கண்ட பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும். அனைவர் வீட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பணியாற்றி வருகிறோம். எல்லோருக்குமான அரசாக இருப்பது தான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம்'' என்றார்.

Next Story

சாட்டை துரைமுருகன் கைது

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Sattai Duraimurugan arrested

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நேற்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.  

வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழக அரசு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை வீராணம் பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை முருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.