Tamil Nadu School Education Board announced site for free neet coaching registration

Advertisment

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு தெரிவிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 15- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் நிலையில், இணையவழியில் மாணவர்கள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஜூன் 8- ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதேபோல் தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என இணையவழி வகுப்பு நடைபெறவுள்ளது.