மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் சரண்சிங் எம்.பி.,யை கைது செய்ய வலியுறுத்தி இன்று (06.06.2023) சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண்மை மற்றும் பொறியியல் துறை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ரேணுகா தேவி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சுமதி, மாவட்டத் தலைவர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்திப் பேசினர்.