/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_63.jpg)
தமிழகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில்கடந்த 2021 ஆம் கல்வியாண்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக வினாடிவினாப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தேர்வாகும் மாணவர்களைஐக்கிய அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில்நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 67 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து,இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வியாழக்கிழமையன்றுதிருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாய்க்கு சென்றடைந்தனர்.
துபாய் சென்ற மாணவர்கள்அங்குள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துபாயின் லூவர் மியூசியம், கஸ்ர்-அல்-வதன் அரண்மனை, ஜெபல் அலி இந்து கோவில்ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றுஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்குமாணவமாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்துதுபாய் சென்ற மாணவிகள் பேசும்போது, “எங்களுக்கு இது கனவு மாதிரி இருக்கு. துபாய்க்கும் இந்தியாவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. துபாய் ஏர்போர்ட்ல எங்களுக்கு பூ கொடுத்து வரவேற்றாங்க. இந்தப் பயணத்த மறக்கமாட்டோம்” என உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
அதேபோல்,துபாயில் இருக்கும் முக்கிய நூலகங்களில்ஒன்றான முகமது பின் ரஷித் நூலகத்துக்கும்மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, அந்தப் பிரம்மாண்ட நூலகத்திற்குதமிழக அரசு சார்பில் 1000 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. துபாய் வாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்வர் வழங்கியிருந்த 1000 புத்தகங்களை நூலகத்தின் இயக்குனர் முஹம்மத் பின் சாலிம்மிடம்அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வழங்கினார். இது தொடர்பான வீடியோக்காட்சிகள்சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)