tamil-nadu-government-allows-film-industry-to-resume-post-production

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப்பரவி வருகிறது. ஊரடங்கை அமல்படுத்தி மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் ஊரடங்கால் திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்துவது முற்றிலும் தடைபட்டுப்போனது. இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத் தமிழக அரசு கருத்தில் கொண்டு ஒரு சில வேலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சினிமா துறையினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

Advertisment

Advertisment

tamil-nadu-government-allows-film-industry-to-resume-post-production

இந்நிலையில் திரைத்துறையினருக்கு தயாரிப்பு பிந்தைய பணிகளுக்கு (போஸ்ட் புரொடக்‌ஷன்) மட்டும் வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாகத் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.