Skip to main content

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து!- கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. 


கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கு தேர்வு நடைபெற்றது. அதன்படி கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றம் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளும், டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி நடைபெற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Tamil Nadu Construction Workers Welfare Board exams cancel


மேலும் ஜனவரி மாதம் 18, 20- ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வும், அதன் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ரத்து செய்யப்படுகிறது. கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிட தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Electric trains canceled in Chennai

சென்னையில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சென்னையில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் -  சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Next Story

மாசி திருவிழா; நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் (படங்கள்) 

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

சென்னை திருவல்லிக்கேணி நடேசன் சாலையில் உள்ள பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி திருவிழா மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கலந்து கொண்டு 1008 பால்குட  ஊர்வலம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அலகு குத்தியும் வந்தனர்.